Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “வாழ்வில் நம்பிக்கை ஒளிரும்”.. கவனமாக செயல்படுவது நல்லது..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று எதிர்கால வாழ்வில் நம்பிக்கை ஒளிரும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். உபரி பண வரவில் முக்கியத் தேவைக்கு கொஞ்சம் சேமிப்பீர்கள். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று மாணவர்கள் கல்வி பற்றிய பயத்தை விளக்கிவிட்டு ஆர்வமாக படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் கவனமாக செயல்படுவது எப்போதுமே நல்லது. கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளை பெறுவீர்கள் .

எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இன்றையநாள் உள்ளம் மகிழும் நாளாக இருக்கும். வெளியூர் பயணம் செல்லும் பொழுது ரொம்ப பொறுமையாகவும் நிதானமாகவும் செல்லுங்கள். அதாவது பொருட்களின் மீது ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடைஅணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |