தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அவப்பெயர் வராமல் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு அவசியம். முக்கியமான செலவுக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். இன்று தொழில் செய்பவர்கள் பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு முன்னேற்ற பாதையில் அடி எடுக்க வைக்க கூடும். பண வரவு சிறப்பாக இருக்கும்.
அது மட்டுமில்லாமல் நண்பர்கள் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கு உண்டான ஆர்வம் இருக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். அதேநேரம் சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இன்றையநாள் ஓரளவு சிறப்பாக தான் இருக்கும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்