தனுசு ராசி அன்பர்களே..!! இன்று சிரமங்களை வெல்லும் திறன் அறிவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக தான் இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். நண்பருக்கு இயன்ற அளவில் உதவிகளைச் செய்வீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். இன்று மனைவி வழியில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வரலாம். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனாலும் அது நொடிப்பொழுதில் சரியாகிவிடும். அதற்காக அவர்களிடம் நீங்கள் வாக்குவாதம் ஏதும் செய்ய வேண்டாம்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். பொறுமையை மட்டும் கையாளுங்கள் அது போதும். அவர்கள் வகையில் சற்று ஒதுங்கியே இருங்கள். அது ரொம்ப சிறப்பை கொடுக்கும். இன்று மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படுவதற்கு இறைவழிபாட்டை தொடர்வது ரொம்ப சிறப்பு. பிள்ளைகளால் பெருமை காணலாம். அதேபோல மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படியுங்கள்.
படித்த பாடத்தை நினைவில் வைத்துக்கொள்வதற்கு எழுதிப் பாருங்கள். சந்தேகம் ஏதேனும் இருந்தால் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்