குடும்பத்திற்காக ஓடாய் உழைத்து தேய்ந்து போகும் தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அரசு வேலைக்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழிலில் அதிக முதலீடு செய்து ஆதாயமும் பெறுவீர்கள். விளம்பரத்தால் உங்கள் நிறுவனத்தின் புகழ் ஓங்கும். பதவி உயர்வுகள் எதிர்பார்க்கக் கூடும். இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது மட்டும் நல்லது. பயணங்களின் போதும் உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். கலைப்பு பித்த நோய்கள் உண்டாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள். வயிற்று உப்புசமும் இருக்கும். வீண் கவலை கொஞ்சம் இருக்கும். மனதில் தேவையில்லாத பயம் இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகள் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்று கோபம் கொஞ்சம் தலை தூக்குவதால் பொறுமையாக செயல்படுங்கள். அக்கம்பக்கத்தில் பேசும்போது நிதானமாகப் பேசுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதலாகதான் உழைக்க வேண்டியிருக்கும். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான வேலைக்கு செல்லும்போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு வாருங்கள் இந்த நாள் மிகவும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்