Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “வீண் செலவுகள் கொஞ்சம் ஏற்படும்”… நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என இருங்கள்..!!

தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லும் தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அடுத்தவர் மீதான நம்பிக்கை உங்களுக்கு குறையும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். சராசரி பணவரவு கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் இருக்கட்டும். தாயின் அன்பு, ஆசி மனதிற்கு ஆறுதலை கொடுக்கும். இன்று வீண் செலவுகள் கொஞ்சம் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டியிருக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வழியே சென்று உதவிகளை செய்வதை மிகவும் தவிர்ப்பது நல்லது. விருப்பமில்லாத இடமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம். முக்கியமாக மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு இன்று நீங்கள் பஞ்சாயத்துகள் ஏதும் செய்ய வேண்டாம் .

நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது மிகவும் சிறப்பு பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய நபர்களின் வருகையும் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் பால்ய நண்பர்களை சந்தித்து மகிழக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். அது போலவே படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள்.இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும்பொழுது வெள்ளை நிற ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் பதினெட்டு சித்தர்கள் இருக்கும்  ஒருசேர படத்தை வணங்கி வருவது நல்லது. சித்தர்கள் வழிபாடு இன்று உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |