தக்க சமயத்தில் அனைவருக்கும் உதவிகளை செய்து மகிழ்ச்சியில் ஆழ்த்த கூடிய தனுசுராசி அன்பர்களே..!! இன்று உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள் ஆக இருக்கும். மதி நுட்பத்தால் மகத்தான காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டு பயணங்கள் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும். இன்று வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்லுங்கள். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கிச் சென்றாலும் வழியே வந்து சிலர் சண்டை போட கூடும். அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். வேளை தவறி உணவு உண்ணும் படியான சூழ்நிலை இருக்கும். அந்த விஷயத்தில் கவனம் கொள்ளுங்கள்.
புதிய பதவி அல்லது பொறுப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும். இன்று நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவார்கள் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று நீங்கள் சக மாணவர்களிடம் பழகும் போது கொஞ்சம் கவனமாக பழகுங்கள். பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு உணவை வைத்துவிட்டு வெளியே செல்லுங்கள் .நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் சிறப்பை கொடுக்கும். தயவுசெய்து இதை மட்டும் செய்து பாருங்கள்.’
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்