தனுசு ராசி அன்பர்களே…!! இன்று கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் நீங்கள் சாட்சி கையெழுத்திட வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று மாலை 5 மணிக்கு மேல் உங்களுக்கு சிறப்பான சூழ்நிலை கொஞ்சம் இருக்கும். அதாவது மனம் கொஞ்சம் அமைதியாக காணப்படும். இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் இருக்கும். ஏற்றுமதியும் ஓரளவு சிறப்பை கொடுக்கும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைப்பதில் காலதாமதம் இருக்கும்.
பழைய பாக்கி ஓரளவு வசூலாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேலும் அதிகாரிகளின் பாராட்டுதல்களும் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் செய்யக்கூடிய நேர்த்தியான வேலைகள் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே எந்தவித வாக்குவாதங்களும் வேண்டாம். கூடுமானவரை இன்று பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள் அது போதும். வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப மெதுவாக செல்ல வேண்டும். அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.
மாணவர்கள் எந்தவித வாக்குவாதங்களும் சக மாணவரிடம் செய்யவேண்டாம். பொறுமையை கடைபிடியுங்கள். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல், இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.