தனுசு ராசி அன்பர்களே…!! இன்று நண்பரின் ஆலோசனையில் மதித்து நடப்பீர்கள். தகுதி திறமை வளர்ந்து புதிய நன்மைகளை பெற்றுக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி கூடும். இன்று மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக இருக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும்.
கலைத்துறையினருக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். பணவரவு மன திருப்தியை கொடுக்கும். புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களின் நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றமான சூழ்நிலை இன்று நீங்கள் சந்திக்க கூடும். இன்று மாணவச் செல்வங்களுக்கு நல்ல அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் அடர் நீல நிறம்