Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு ”குடும்பத்தில் குழப்பம்” குடும்பத்தை பிரிந்து தங்குவீர்கள் ….!!

தனுசு ராசி அன்பர்களே…!!  இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். புண்ணிய காரியங்களுக்கு பொருள் உதவிகளை செய்வீர்கள். பெற்றோர் மீதான பாசம் இன்றைக்கு அதிகரிக்கும். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். தெய்வ வழிபாடுகளால்  திருப்தி காண வேண்டிய நாளாக இன்று இருக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாள்வது நல்லது. தொழில் கூட்டாளிகளை மாற்றும்  சிந்தனை மேலோங்கும். இன்று குடும்பத்தில் குழப்பங்கள் கொஞ்சம் இருக்கும். இன்று மற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்வதன் மூலம் நல்ல பெயர் எடுக்க முடியும். சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்கும். சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரலாம். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்றுவிடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். இன்று நீங்கள் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து காரியங்களையும் சிறப்பாக செய்யமுடியும். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்டமான  நிறம் : கரு நீல நிறம்

Categories

Tech |