Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு…”தொழில் வியாபாரத்தில்  அபரிமிதமான வளர்ச்சி”…. அதிர்ஷ்ட வாய்ப்பு…!!!

தனுசு ராசி அன்பர்களே…!! இன்று உங்களிடம் சிலர் அனுகூலத்தைப் பெற முயற்சிகளை மேற்கொள்வார்கள். இயன்ற அளவில் உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில்  அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

அதை பற்றி எல்லாம் கவலை படாதீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முக்கியமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். அதே போல் கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று எதிர்பாராத விதத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய முயற்சிகளில் இன்று ஓரளவே வெற்றி இருக்கும். ஆகையால் எதை செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் பொறுமையோடு நிதானமாக செய்வது நல்லது.

ரொம்ப முக்கியமான காரியங்களை பெரியோரிடம் கேட்டு ஆலோசித்து செய்யுங்கள். மிகவும் சிறப்பை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |