தனுசு ராசி அன்பர்களே..!! இன்று நட்பால் நன்மை கிட்டும் நாளாக இருக்கும். நல்ல சந்தர்ப்பங்கள் உங்களை தேடி வரக்கூடும். அடுத்தவர்கள் நலனில் அக்கறை காட்டியதற்கு ஆதாயம் இன்று கிடைக்கும். மறதியால் விட்டுப்போன பணிகளை செய்து முடிப்பீர்கள். பயணம் நல்ல பலனைக் கொடுக்கும். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும்.
வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். எந்த ஒரு காரியத்திலும் அவசரம் காட்டாமல் இருப்பது நல்லது. பொறுமையாக செயல்படுங்கள். பதட்டத்தை தயவு செய்து குறைத்துக் கொள்ளுங்கள். நிதானமாக இருந்தால் அனைத்தும் வெற்றியாகவே இருக்கும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது நீல நிறத்தில் ஆடையோ அல்லது நீல நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் சென்றால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் அம்மன் வழிபாட்டுடன் இன்று நாளை தொடங்கினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்