எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே.!! இன்று இன்பம் நிறைந்த இனிய நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகார பதவி கிடைக்கும். விருப்பம்போல் வீட்டில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்று சாதகமான பலன்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். மற்றவர்கள் பாராட்ட கூடிய மிகப்பெரிய செயல்களை செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். இன்று சமூகத்தில் அந்தஸ்து உயரும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைகுட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். முடிந்தால் காக்கைக்கு அன்னமிட்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்