Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… இல்லத்தில் இனிய சம்பவம்…. தேவையில்லாத விஷயம் வேண்டாம் …!!

தனுசு ராசி அன்பர்களே …! இன்று மகிழ்ச்சி கூடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்களுடைய புத்திசாலித்தனம். சுபகாரிய பேச்சுக்கள் முடிவதற்கான அறிகுறிகள் தோன்றும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். வாழ்க்கைகளை தள்ளிப் போடுவதும், சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மற்றவரிடம் பேசும்போது கண்டிப்பாக நிதானம் வேண்டும்.யாரிடமும் கோபம் மட்டும் இன்று கொள்ள வேண்டாம்.

மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை எப்போதுமே என்ன வேண்டாம். தூர தேசத்து உறவினர்களின் உன்னதமான செயல்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தேவையில்லாத விஷயத்தில் கவனத்தை செலுத்தி விட்டு, துன்பப்பட நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்று காதலர்கள் எப்பொழுதும் போலவே பொறுமை காக்க வேண்டும். நிதானமாக இருந்தால் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |