Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு ”வாய்ப்புகள் கதவை தட்டும்” பெண்களுக்கு வீண் செலவு இருக்கும் …!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று விவாதத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் ஓரளவு விலகிச் செல்லும். வாய்ப்புகள் வாயில் கதவை வந்து தட்டும். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்பு செலவுகள் கொஞ்சம் இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு கடுமையாக உழைப்பீர்கள். பொருளாதாரம் ஓரளவு சீராக இருக்கும். பணவரவு கொஞ்சம் கால தாமதமாகத்தான் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக தான் இருக்கும். சரியான நேரத்திற்கு மட்டும் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். நேரம் தவறி மட்டும் உண்வே உண்ண வேண்டாம். வயிறு தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள்.

பெண்களுக்கு வீண் செலவுகள் இருக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். பயணங்கள் மூலம் ஓரளவு அலைச்சல் இருக்கும். உங்களுடைய திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். இருந்தாலும் ஒரு சில முக்கிய முடிவுகளை எடுக்கும்பொழுது கொஞ்சம் கவனமாகவே முடிவெடுங்கள் அது போதும். கூடுமானவரை பெரியவரிடம் ஆலோசனை கேளுங்கள். கொடுக்கல் , வாங்கல் விஷயங்களில் கூட கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். எந்த காரணத்தைக் கொண்டும் இன்று யாருக்கும் வாக்குறுதிகளை மட்டும் கொடுக்காதீர்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும் அது மட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு அன்னமிட்டு சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |