தனுசு ராசி அன்பர்களே…!! இன்று உங்களுடைய புகழ் ஓங்கும். தெய்வ நம்பிக்கை பாக்கியம் ஏற்படும். கோவில் திருப்பணிகள் செய்ய மனம் விரும்பும். வாழ்க்கையில் வசந்த காலம் என நல்ல திருப்பங்கள் இன்று ஏற்படும். இன்று எதிலும் கவனமாக இருப்பது மட்டும் நல்லது. காரியங்களில் தடை தாமதம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றால் மற்றவர்கள் வலிய வந்து வம்புக்கு இழுப்பார்கள். அந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். இன்று வாகனங்களில் செல்லும்போது மட்டும் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
இன்று வீடு மனை, வாகனம் போன்ற விஷயங்கள் சாதகமான பலனைக் கொடுக்கும். குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகள் தலை தூக்கும். பொறுமையை கையாள்வது நல்லது. இன்று நீங்கள் ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது மஞ்சள் நிற ஆடையில் செல்லுங்கள். இல்லையேல் மஞ்சள் நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும். அதேபோல இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய பகவானை வழிபட்டு தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்