தனுசு ராசி அன்பர்களே..!! இன்று எதிர்மறையாக பேசுபவரிடம் விலகியிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஆரவாரத் தன்மை தவிர்க்கவும். பணவரவில் தாமதம் இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். குடும்ப உறுப்பினர்கள் கூடுதல் பாசத்துடன் நடந்து கொள்வார்கள். இன்று தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். சங்கிலித் தொடர் போல வந்த கடன் சுமை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். வியாபாரத்தில் இருந்த மறைமுக போட்டியில் விலகிச்செல்லும். இன்று கெட்ட கனவுகள் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பாராத இடமாற்றம் இருக்கும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள்.
எதிர்பாராத பணம் கைக்கு வருவதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். ஆனால் திடீர் பண நெருக்கடி கூட இன்று வரலாம். எதையும் சமாளிக்கும் திறமை இன்று இருக்கும். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவரிடம் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் பொறுமையை கையாளுவது மிகவும் சிறப்பு. குடும்பத்தாருடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும், அதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போதும், முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போதும் ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் சென்றால் அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். அதேபோல நீங்கள் காலையில் எழுந்ததும் முருகனை மனமார நினைத்து முருகன் வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்