Categories
சினிமா

நீங்க பண்ணுனா நல்லா இருக்கும்… ஓகே சொன்ன மலர் டீச்சர்… மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!!

சாய் பல்லவி நடிக்கும் லவ் ஸ்டோரி திரைப்படத்தில் பாடல் ஒன்றிற்கு அவரை நடனம் அமைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது

நடிகை சாய்பல்லவி மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரமாக நடித்து மிகவும் புகழ் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் ஃபிடா எனும் படத்தில் நாயகியாக நடித்த சாய் பல்லவி, தற்போது அதே இயக்குனரின் லவ் ஸ்டோரி எனும் படத்தில் நாக சைதன் என்ற நடிகருக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இப்படத்தின் படபிடிப்பு ஆனது 90% முடிவடைந்துள்ள சமயத்தில் ஊரடங்கு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் அதனை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இதில் லவ் ஸ்டோரி படத்தின் மீதமுள்ள ஒரு பாடல் படமாக்க உள்ளதால், அப்பாடலுக்கு சாய் பல்லவி அவர்கள் நடனம் அமைத்து தர வேண்டும் என இயக்குனர் சேகர் கம்முலா கூறியதாக தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

Categories

Tech |