ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர் குழுக்கள் அமெரிக்காவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தின் மீது நடத்திய சைபர் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ரஷ்யாவை எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் பெரிய மற்றும் சிறிய வர்த்தக நிறுவனங்களின் மென்பொருள்களை பாதுகாக்கும் மற்றும் பராமரிக்கும் பணியை செய்யும் நிறுவனமாக “கசேயா” திகழ்கிறது. இந்த “கசேயா” நிறுவனத்தின் மீது ரஷ்யாவை சேர்ந்த ஆர்.இ. வில் என்னும் ஹேக்கர் குழுக்கள் ரான்சம்வேர் என்னும் சைபர் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதனையடுத்து இந்த ஹேக்கர் குழுவிற்கு ரஷ்ய அரசாங்கம் பாதுகாப்பு வழங்கி வருவதாக அந்நாட்டின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யா இதனை திட்டவட்டமாக ஏற்க மறுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ரஷ்யாவின் அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 1 மணி நேரம் உரையாடியுள்ளார்.
இதனையடுத்து ரஷ்யாவில் இருந்து வரும் சைபர் தாக்குதலுக்கான நடவடிக்கையை ரஷ்யா எடுக்காவிட்டால் அந்நாடு மிகவும் மோசமான பின் விளைவை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார்.