தோசை , இட்லிக்கேற்ற ஒரு பக்காவான சைடிஷ் எள்ளு பொடி செய்யலாம் வாங்க .
தேவையான பொருட்கள்:
எள் – 1 கப்
உளுத்தம்பருப்பு – 1/4 கப்
கடலைப்பருப்பு – 1/4 கப்
காய்ந்தமிளகாய் – 6
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு ஏற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் எள்ளை போட்டு, பொரியும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய் , பெருங்காயத்தூள்,வறுத்த எள்ளு , உப்பு சேர்த்து , கிளற வேண்டும் . பின்னர் இக்கலவை ஆறியவுடன் அரைத்து பொடியாக்கினால் சுவையான எள்ளு பொடி தயார் !!!