தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தங்கை மஹா, அண்ணாநகரில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் அழகு நிலையம் திறப்பு விழாவில் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். சென்னை அண்ணா நகரில் மஹா அழகு சாதன குழுமத்தின் புதிய கிளை ‘யோலோ’ என்ற பெயரில் திறக்கப்பட்டது. இருபாலருக்குமான அழகு நிலையமாக இருக்கும் யோலோவுடன் சேர்த்து ஒப்பனை சிகிச்சை மற்றும் தலை முடி பொறுத்துதல் அழகு நிலையமும் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகைகள் சாயிஷா, யாஷிகா ஆனந்த், அதுல்யா ரவி, நடிகர் ஆர்ஜே பாலாஜி ஆகியோர் வருகை தந்திருந்தனர். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவரது மனைவியுடன் கலந்துகொண்டனர். ஐசரி கணேஷின் தங்கைதான் மஹா அழகு சாதன குழுமத்தின் நிறுவனராக உள்ளார்.
மற்ற அழகு நிலையத்தை போல் இல்லாமல் புதிதாக தோயோ (Thoyo) என்ற ஒப்பனை சிகிச்சை மற்றும் தலை முடி பொறுத்துதல் வசதியுடன் இந்த அழகு நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் இந்த அழகு நிலையம் பல்வேறு இடங்களில் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்றி அழகு நிலையத்தை சாயிஷா, யாஷிகா ஆனந்த், ஆர்ஜே பாலாஜி என பிரபலங்கள் தொடங்கி வைத்தனர்.