இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜக கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
இன்று காலை முதல் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் முக்கியமான நபர் ஒருவர் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.ஏற்கனவே பாஜகவின் மூத்த தலைவர்கள் இவருடன் தொடர்ச்சியாக ஒரு ஆலோசனை நடத்தினர்.
அதே நேரத்தில் வருகிற பிப்ரவரியில் டெல்லியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலிலும் சாய்னா நேவால் பிரச்சாரம் செய்வதற்கு பாஜக கட்சி திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் சாய்னா நேவால் அதிகாரப்பூர்வ பாரதிய ஜனதா கட்சியில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இது பாரதிய ஜனதாவுக்கு இது கூடுதல் பலமாகும் பார்க்கப்படுகிறது.