தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், டென்மார்க்கைச் சேர்ந்த லைன் ஜார்ஸ்ஃபெல்ட்டை (Line Kjaersfeldt) எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சாய்னா நேவால் 13-21, 21-17, 15-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். இப்போட்டிக்கு முன் கடந்த நான்கு முறையும் லைன் ஜார்ஸ்ஃபெட்டிடம் வெற்றிகண்ட சாய்னா இம்முறை முதல்முறையாக தோல்வியடைந்துள்ளார்.
முன்னதாக இந்தத் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிதாம்பி ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோரும் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.