Categories
உலக செய்திகள்

எங்களுக்கு உலக தலைவர்களின் ஆதரவு வேண்டும்… இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்…!!!

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசா உலக தலைவர்கள் தங்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. எனவே, மக்கள் அதிபரை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா தெரிவித்திருப்பதாவது, இது இயற்கையான ஆர்ப்பாட்டம்.

மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அரசியலமைப்பு நடைமுறைகளின் மூலமாக கிடைக்கக்கூடிய வழிமுறைகள் அனைத்தையும் பயன்படுத்துவோம். எங்கள் நாட்டிற்கு உதவி செய்யுமாறு உலக தலைவர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். எங்களுக்கு அதிகமான ஆதரவு தேவை என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |