Categories
உலக செய்திகள்

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல்… வாபஸ் பெற்ற சஜித் பிரேமதாசா…!!!

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசா அதிபர் தேர்தலுக்காக தாக்கல் செய்திருந்த வேட்புமனுவை வாபஸ் பெறவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருப்பதால் புதிதாக அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாளை நடக்கவிருக்கிறது. இதில் இடைக்கால அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே மற்றும் எதிர்க்கட்சி தலைவராக உள்ள சஜித் பிரேமதாசா உட்பட சில கட்சி தலைவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்கள்.

இந்நிலையில், சஜித் பிரேமதாசா அதிபர் தேர்தலுக்காக தாக்கல் செய்திருந்த வேட்புமனுவை நான் அதிகம் நேசிக்கும் நாடு மற்றும் மக்களுக்காக வாபஸ் பெறுகிறேன் என்று கூறியிருக்கிறார். எனினும், தன் ஐக்கிய மக்கள் சக்தி, கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், வெற்றியடைய உழைப்பதாக தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |