சாக்கு மூட்டையில் இருந்து தொழிலாளியின் சடலம் குறித்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள திருக்கண்டீஸ்வரம் பகுதியில் சாக்கு மூட்டை ஒன்றில் சடலம் இருப்பதாக நெல்லிக்குப்பம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர். அதன்பின் முட்புதரில் அழுகிய நிலையில் கிடந்த சடலம் குறித்து அப்பகுதியில் வசிப்பவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பதும், பின் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து குமாரின் உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரை யாராவது கொலை செய்து இருப்பார்களா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.