Categories
சினிமா

“நட்பை விட காதல் தான் முக்கியம்”காதலை பகிரங்கமாக தெரிவித்த பிக்பாஸ் பிரபலம்..!!

கவின்,சாக்க்ஷி நண்பர்களாக நெருங்கி பழகி வந்த நிலையில் கவின் மீது காதல் வயப்பட்டதாக சாக்க்ஷி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒலிபரப்பிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 வெற்றியைத் தொடர்ந்து சீசன் 3 நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக  அறிமுகப்படுத்தப்பட்டன. நாளுக்கு நாள் மிக சுவாரசியமான புதுப்புது நிகழ்வுகளை இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பி வருகிறது.

Image result for bigg boss sakshi

இந்நிலையில் 12 ஆம் நாளான இன்று சாக்க்ஷி கவின் மீது காதல் வயப்பட்டதாக ஷெரினிடம் தெரிவித்தார். மேலும் அபிராமி கவினிடம் நெருங்கிப் பழகுவது தனக்கு பிடிக்கவில்லை என்றும்,நேற்று முகின் அபிராமி  காதலிப்பதாக எழுந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசும்போது கவினுக்கு முகச்சுளிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். ஆகையால் விரைவில் கவினிடம் காதலை சொல்ல இருப்பதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஷெரின், அபிராமிக்கு தெரிந்தால் என்னவாகும் என்று கேட்ட கேள்விக்கு, அபி எனக்கு முக்கியமில்லை கவின் தான் எனக்கு முக்கியம் என்று சாக்க்ஷி  பதிலளித்துள்ளார்.

Categories

Tech |