Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கல்யாணமாகி 4 மாதத்தில்…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி பகுதியில் கண்ணையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலசுப்ரமணியன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பாலசுப்ரமணியம் கடந்த 23 – ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் கிறிஸ்டியான் பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பாலசுப்ரமணியம் மெட்டுக்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார்சைக்கிள் வேகத்தடையில் ஏறி இறங்கியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் பலத்த காயமடைந்த பாலசுப்ரமணியனை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பாலசுப்ரமணியன் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாலசுப்ரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காட்பாடி காவல்நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |