பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மழவந்தாங்கல் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் அய்யனார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த அரசு பேருந்து மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின்னர் படுகாயம் அடைந்த அய்யனாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.