Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்க ஏற்கனவே சொன்னோம்… பெயர்ந்து வரும் புதிய சாலை… பொதுமக்களின் கோரிக்கை…!!

புதியதாக அமைக்கப்பட்ட தார் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் பகுதியிலிருந்து காளக்கண்மாய் கிராமத்திற்கு மருதக்கண்மாய் வழியாக சாலை செல்கிறது. இந்நிலையில் மருதக்கண்மாயிலிருந்து ஒட்டாணம் வரை ஏற்கனவே உள்ள சாலையை பெயர்த்து விட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது போடப்பட்டுள்ள தார்ச்சாலையில் ஜல்லிக்கல் நிரப்பாமல் அமைக்கப்பட்டதால் அப்பகுதி வழியாக வாகனங்கள் சென்ற போது அது பெயர்ந்து விட்டது. இதனை அடுத்து சாலை ஆய்வாளர் புதிதாக போடப்பட்ட தார் சாலையை ஆய்வு செய்த போது கிராம மக்கள் அவரிடம் வாக்குவாதம் செய்தனர்.

இதனையடுத்து ஒட்டானத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் பொதுமக்கள் தரப்பில் புதிய தார் சாலை அமைக்கும் போது நாங்கள் தரமில்லை என்று புகார் செய்தோம். ஆனால் அதை கண்டு கொள்ளாமல் சாலையை அமைத்தனர். இதனால் வாகனங்கள் சென்றபோது அந்த சாலையில் பள்ளம் ஏற்பட்டுவருகிறது. ஆகையால் இந்த சாலையை சரி செய்து தரும்படி கூறியுள்ளார். இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் சாலையை சரி செய்ய அறிவுறுத்தி இருக்கிறேன் என நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மருதுபாண்டி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |