Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அதிகரிக்கும் விபத்து” சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை….!!

குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை அதிகாரிகளிடம் விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனிக்கடவு ஊராட்சியில் ராமச்சந்திராபுரம், சிந்திலுப்பு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் சிந்திலுப்பு சாலை, ராமச்சந்திராபுரம் சாலை சந்திக்கும் இடத்தில் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலைகள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனையடுத்து இப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த பொருட்களை இந்த சாலை வழியாக கொண்டு சென்று வருகின்றனர்.

இந்த 3 சாலைகளும் சந்திக்கும் இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுவதால் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றது. எனவே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலையை சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |