Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கை…. அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம்…. கோட்டாட்சியர் தகவல்….!!

குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பொது விநியோகத் திட்டத்தின் சார்பாக மாதாந்திர நுகர்வோர் பாதுகாப்பு குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சரவணன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் குடிமைப்பொருள் தனி தாசில்தார் வெங்கடேசன் முன்னிலை வகித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் நுகர்வோர் சங்க செயலாளர் அருண்கென்னடி பேசியதாவது, இம்மாவட்டத்தில் பிரதான சாலையோரம் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், பின் குண்டு குழியுமாக இருக்கும் பிரதான சாலைகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் எனவும், நீர்நிலை மற்றும் சாலையோரங்களில் இறைச்சி, மீன் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை அடுத்து இம்மாவட்ட கோட்டத்தில் இருக்கும் வேளாண் அலுவலகத்தில் உள்ள விதை நெல் தரம் வாரியாக இருப்பு விவரத்தை அறிவிப்பு பலகையில் தெரிவிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். பின்னர் இதனை போல் சின்னசேலம்  உள்பட 3 பகுதிகளை சார்ந்த நுகர்வோர் சங்கத்தின் பிரதிநிதிகள் பல கோரிக்கைகள் குறித்து பேசியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |