சாலையில் முதியவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சந்தைகோடியூர் பகுதியில் இருக்கும் காவல்நிலையம் ரோட்டில் 55 வயதுடைய முதியவர் ஒருவர் மயங்கி கிடந்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரை எழுப்பும் போது சுயநினைவின்றி கிடந்துள்ளார். இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
பின்னர் மயங்கிய நிலையில் இருந்த அவரை எழுப்ப முயன்ற போது அவர் இறந்திருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இறந்தவர் யார் எந்த ஊரில் வசித்தவர் என இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.