போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் சந்திப்பு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்திற்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்த வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் சீனிவாசன் என்பது காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சீனிவாசனை கைது செய்துள்ளனர்.