காங்கிரஸ் கட்சியினர் திடிரென சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடை பகுதியில் திடிரென கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவரான பஞ்சாட்சரம் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் நகர காங்கிரஸ் கட்சி தலைவரான வக்கீல் அண்ணாதுரை முன்னிலை வகித்துள்ளார்.
இதனையடுத்து பிரியங்கா காந்தியை கைது செய்த உத்தரபிரதேச முதல்-மந்திரியை கண்டித்து சாலையில் கோஷங்களை எழுப்பி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.