சாலையில் கிடந்த ஆணின் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உள்ளூர் குறுக்கு சாலை பகுதியில் 45 வயது உடைய அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்த புகாரின் பேரில் உயிரிழந்தவர் யார், எந்த ஊரில் வசிப்பவர், விபத்துக்கு காரணமான வாகன ஓட்டுனர் யார் என்பது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.