சாலையில் கிடந்த முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்து ஏரியில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள வீராணம் ஏரிக்கரை சாலையில் முதலை ஒன்று கிடந்துள்ளது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் முதலை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்பின் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அந்த முதலையை பிடித்துள்ளனர்.
பின்னர் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் முதலையை மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த முதலையை வக்காரமாரி ஏரிக்கு கொண்டு சென்று விட்டுள்ளனர்.