ரசாயன பவுடர் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மும்பைக்கு ரசாயன பவுடர் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரியை பிரபு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் தகரக்கொட்டகை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஓட்டுநர் பிரபு அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். மேலும் இச்சம்பவம் காரணத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.