லாரி டயரில் சிக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் மத்திய பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்தவர். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கோவிந்தராஜனும், நிர்மலாவும் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளனர். அப்போது பைபாஸ் சாலையின் அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென ஸ்கூட்டர் மீது உரசி உள்ளது.
இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் சக்கரத்தின் நடுவில் நிர்மலா சிக்கிக் கொண்டுள்ளார். இதில் நிர்மலா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த கோவிந்தராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் நிர்மலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரான செல்வராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.