சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையிலிருந்து கரூர் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டது. இந்நிலையில் லாரி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவை-திருச்சி மெயின் சாலையில் அண்ணாசிலை அருகில் வந்து கொண்டிருந்தபோது டிரைவர் வளைவில் லாரியை திருப்ப முயன்றுள்ளார். அப்போது லாரி எதிர்பாராதவிதமாக நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்நிலையில் அண்ணா சிலை பகுதி சாலை குறுகலாக உள்ளதால் அங்கு விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.