Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கூடுதலாக பேருந்து வேண்டும்…. மாணவர்கள் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

கூடுதலாக பேருந்து வேண்டி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலம் பகுதியில் இருக்கும் அரசு கொளஞ்சியப்பர்  கலைக்கல்லூரி அமைந்திருக்கிறது. இந்த கல்லூரிக்கு சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மாணவர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கல்லூரி நேரங்களில் தங்களுக்கு போதிய அளவில் பேருந்து வசதி இல்லை என மாணவர்கள் தரப்பில் தெரிவித்தனர். அதன்பின் குறிப்பாக உளுந்தூர்பேட்டை மற்றும் விருதாச்சலம் மார்க்கமாக இயங்கும் அரசு பேருந்துகள் சரி வர இயங்காத காரணத்தினால் மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கும் மீண்டும் திரும்ப ஊருக்கு செல்வதற்கு முடியாமல் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து கல்லூரி முடிந்ததும் மாணவர்கள் பேருந்து நிலையத்திற்கு சென்ற நிலையில் பேருந்தில் பயணிகள் அதிக அளவில் இருந்ததால் அவர்களுக்கு இடம் இல்லாமல் இருந்துள்ளது. பின்னர் தாங்கள் வழக்கமாக செல்லும் டவுன் பேருந்து அங்கு வராததால் கோபம் அடைந்த மாணவர்கள் கல்லூரி மற்றும் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி திடீரென பேருந்து நிலையத்தில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் அவர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இதை ஏற்றுக் கொண்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |