Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பேருந்து-லாரி மோதல்…. காயமடைந்த ஓட்டுனர்கள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதி நோக்கி கோயம்புத்தூரிலிருந்து உப்பு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் லாரி பெருங்காட்சி ஏரிப் பகுதியில் சென்ற போது தனியார் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில் பேருந்தின் முன்பகுதி நொறுங்கி சேதமடைந்துள்ளது.

இதில் லாரி ஓட்டுநர் தமிழ்ச்செல்வன், பஸ்சில் இருந்த விக்னேஷ் மற்றும் பேருந்து ஓட்டுநர் கண்ணன் என 3 பேர் காயமடைந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஓட்டுநர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |