Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்ற பாம்பு…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. இளைஞர்களின் வீர செயல்….!!

நெடுசாலையின் குறுக்கே சென்ற மலைப்பாம்பை இளைஞர்கள் பிடித்து காட்டில் விட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகாமையில் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்றுள்ளது. அந்நேரம் சாலையின் குறுக்கே பத்து அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் திரண்டு வந்து மலைப்பாம்பை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது மலைப்பாம்பு சாலையில் அங்கும் இங்குமாக நீண்ட நேரம் ஓடியுள்ளது. இதனை அடுத்து இளைஞர்கள் நீண்ட நேரம் போராடிய பிறகு அந்த மலைப்பாம்பை பிடித்து சென்று காட்டில் விட்டுள்ளனர்.

Categories

Tech |