Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சாலையில் நடந்து சென்ற தொழிலாளி மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.குமாரமங்கலம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது உறவினரான ராஜாமணியுடன் சுப்பிரமணியபுரம் கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது வடலுரிலிருந்து கடலூருக்கு அதிவேகமாக வந்த கார் திடீரென மோதியதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாமணியை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |