Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் வந்து நிற்குது…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

போக்குவரத்துக்கு இடையூறாக யானை சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் தாமரைகரையில் சிங்கப்பூர் சுண்டப்பூர் பிரிவு இருக்கின்றது. அங்கு மாலை 5 மணி அளவில் காட்டு யானை ஒன்று தாமரைக்கரை- பர்கூர் சாலையில் வந்து நின்று சுற்றித் திரிந்தது. இதனால் அந்தியூரில் இருந்து பர்கூர் நோக்கி சென்ற வாகனங்களும், மைசூரிலிருந்து அந்தியூர் நோக்கி வந்த வாகனங்களும் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் எந்த வாகனங்களும் செல்ல முடியாத வகையில் யானை அங்குமிங்குமாக தெரிந்ததால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதனையடுத்து அந்த யானை  வனப்பகுதிக்கு சென்றதால் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதன்பின் கார், பேருந்து, லாரி போன்ற வாகனங்களில் சென்றவர்கள் தங்களது செல்போனில் அந்த யானையை தூரமாக நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர். இவ்வாறு யானை சாலையில் நின்று இருந்ததால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |