Categories
மாநில செய்திகள்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், சம்பள உயர்வு….. 12,000 குடும்பங்கள் முதல்வருக்கு கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவார்கள் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. ஆனால் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று 19 மாதங்கள் ஆகியும்  இதுவரை பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்து பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது.

அந்த வகையில் மீண்டும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அதாவது பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யும் வரை 20600 ஊதியமாக வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். ‌ அதன் பிறகு பஞ்சாப், ஒடிசா, ராஜஸ்தான், ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தது போன்று தமிழகத்திலும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களுக்காக பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது 12,000 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு தற்போது தொகுப்பூதிய அடிப்படையில் மாதம் 10,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. மேலும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதோடு, சம்பளத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |