தமிழ் திரையுலகில் நட்பே துணை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அனைகா. தற்போது டிக்கிலோனா படத்தில் நடித்து “பேர் வச்சாலும் வைக்காம போனாலும்” பாடலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் பேசிய அவர் மலையாளத்தில் முதலில் நடித்த எனக்கு நட்பே துணை தான் முதல் தமிழ் படம். தற்போது டிக்கிலோனா படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. நடிப்பின் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்ததால் தான் நடிப்பதற்கு வந்தேன்.
மலையாளத்திலும் தமிழிலும் தலா ஒவ்வொரு படம் நடித்து வருகிறேன். என்னை பொருத்தவரை சம்பளம் முக்கியம் அல்ல. மாறாக தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன். வித்தியாசமான கதையுடன் நடிப்புக்கு சவால் கொடுக்கும் வேடங்களில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன். எனக்கு மாடலிங் மீது பற்று இருப்பதால் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பேன். விமர்சனங்கள் பற்றி நான் கவலைப்படுவதில்லை” எனக் கூறியுள்ளார்.