கனடாவில் ஆண்டொன்றுக்கு 70 ஆயிரம் பவுண்டுகள் சம்பாதிக்கும் இந்திய வம்சாவளியான இளம்பெண் தான் அணியும் கவர்ச்சி உடையால் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.
லண்டனில் பிறந்து ரொரன்றோவுக்கு குடிபெயர்ந்த இந்திய மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியினரான 29 வயதுடைய இளம்பெண் சப்ரினா சக்கு, கனடாவில் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மற்றும் பயிற்சியின் மூலம் ஆண்டொன்றிற்கு 70,000 பவுண்டுகளை சம்பாதித்து வருகிறார்.
இவர் எப்பொழுதும் கவர்ச்சியான உடைகளை அணிந்து வருகிறார். அதனால் இவரைப் பார்க்கும் மக்கள் இவர் சம்பாதிக்கும் பணத்தை வேலை செய்துதான் பெறுகிறார் என்பதை ஒப்புக்கொள்ளாமல் வேறொரு பணக்கார ஆணை சார்ந்து தான் இவர் இருக்கிறார்கள் என்று சொல்லி வருகின்றனர். இது தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக சப்ரினா தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய ஆடம்பர வாழ்க்கைக்காக எந்த ஒரு ஆணையும் சார்ந்து வாழ்வதற்கு எனக்கு எப்போதும் ஆசை இல்லை என்று கூறியுள்ளார். வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு முன் ஆறு இலக்க ஊதியத்தை பார்த்த பின்னரே செட்டில் ஆக வேண்டும் என்ற குறிக்கோளை தான் கொண்டுள்ளதாகவும் சப்ரினா தெரிவித்துள்ளார்.