சலவை தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சலவை தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தனின் மனைவி இறந்து விட்டார். தற்போது கோவிந்தனின் 2 மகன்களும் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இதனையடுத்து கோவிந்தன் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தனின் காலில் புண் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோவிந்தன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தன் கருங்காடு மயானக் கரையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அந்த வழியில் சென்றவர்கள் பேட்டை காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கோவிந்தனின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.