தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேம்பால பகுதியில் தொடர் கனமழையால் மழைநீர் தேங்கி நின்று வெள்ளக்காடாக ஓடுவதை காணமுடிகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த சாலையில் மூன்று அடிக்கு மேலாக மழை நீர் தேங்கிய காரணத்தினால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பழுதடைந்து அப்படியே நின்றுள்ளது. மேலும் இதன் காரணத்தினால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.