பிரபல நிறுவனம் ஒன்று பாட்டிலில் காற்றை அடைத்து ரூ.2500 க்கு விற்று தொழில் நடத்தி வருகின்றது.
நாம் சுவாசிக்கும் காற்றையும் கூட பாட்டிலில் அடைத்து இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனமொன்று தொழில் செய்யத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தின் பிரபல நிறுவனமான My Babbage காற்றை கலர் கலர் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யும் தொழிலை தொடங்கியிருக்கிறது. பல வகையான பிளேவர்களிலும் காற்று கிடைக்கிறது. நமக்கு என்ன பிளேவரில் காற்று ஆர்டர் செய்து வேண்டுமோ அதை வாங்கிக் கொள்ளலாம். இந்த நிறுவனம் பல்வேறு நாடுகளுக்கும் காற்றை விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனம் இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் பிற பகுதிகளில் இருந்தும் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகிறது. 500 மில்லி பாட்டில் காற்றின் விலை ரூபாய் 2500 க்கு விற்கப்படுகின்றது. இதனை வாங்கும் மக்கள் சில நொடிகளில் பாட்டிலை திறந்து காற்றை சுவாசித்து உடனே அடைத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு வாரம், ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் சொந்த ஊரின் காற்றை அடைத்து கேட்டாலும் ஆதியும் நிறுவனம் சிறப்பு ஆர்டராக எடுத்து செய்து வருகின்றது.